தனது மனைவியின் தங்கைக்கு தன் மூலம் பிறந்த 12 நாள் குழந்தையை 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்மாறு மொனறாகலை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் திருமதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின், மொனறகெலே தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் தனது மனைவியின் சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
