படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரரின் தங்கை!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், தொடர்ந்து தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ´நெற்றிக்கண்´ படத்தை தயாரித்திருந்த விக்னேஷ் சிவன், ´கூழாங்கல்´ மற்றும் ´ராக்கி´ ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதில் கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கவின் கதாநாயகானாக நடிக்கும் ஊர் குருவி படத்தை தயாரிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே போல விநாயக் என்பவர் இயக்கும் ´வாக்கிங் டாக்கிங் ஸ்டிராபெர்ரி ஐஸ்கிரீம்´ என்ற படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ´சூரரைப் போற்று´ படத்தில் சே என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி ஜோனிதா காந்தி நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் தங்கை மால்தி சாஹர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதனையடுத்து அவரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

Related Articles

Latest Articles