கம்பளை, வெளிகல்ல எல்பிட்டிய பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுவதியின் சடலம் இன்று முற்பகல் தோண்டியெடுக்கப்பட்டது.
கம்பளை நீதவான் முன்னிலையிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
கம்பளை, வெளிகல்ல எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல்போயிருந்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே இன்று சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
