‘படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோத உத்தரவு’ – சுமந்திரன் சுட்டிக்காட்டு

சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த எம் ஏ சுமந்திரன், அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள்.

அந்த வகையில் பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் அனுமதி சட்டவிரோத உத்தரவு என்றார்.

Related Articles

Latest Articles