பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக 7 பயணக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

ஹமாஸ் அமைப்பிடம் 20 பணய கைதிகள் வரை உயிருடன் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களில் 7 பணய கைதிகளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்து உள்ளது.

இதுபற்றிய தகவலை இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட பின்னர், பணய கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர்.

இந்த கைதிகள் பரிமாற்ற நிகழ்வு டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும். இதனை நாடு முழுவதும் உள்ள பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள்.

Related Articles

Latest Articles