‘பணவீக்கம் 70 வீதமாக அதிகரிக்கக்கூடும்’

பணவீக்கமானது, அடுத்த சில மாதங்களில் 70 வீதமாக அதிகரிக்கலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

எனினும், 2023 ஆம் ஆண்டளவில் பணவீக்கம் குறைவடையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

” பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டம் அவசியம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles