பண்டாரவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய, தனமல்வில ஊடாக தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது பஸ் சாரதியும் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த இருவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
