பண்டாரவளை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எடம்பிட்டியவை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவரெ இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
களனி – கோணவலயை சேர்ந்த 50 வயதான ஒருவர் நேற்று முன்தினம் (23) ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளதுடன், குறித்த பெண்ணை நேற்று ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.
அந்நபர் அவசரமாக ஹோட்டலில் இருந்து வௌியேறியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இருவரும் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போதே பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன், நஞ்சு அருந்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரால் எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










