பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரி புதிய கட்டட திறப்பு விழா

பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நேற்று  (28) அதிபர் மொஹிதீன் முனவ்வர் தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அருணாசலம் அரவிந்தகுமார், சாமர சம்பத் தசநாயக்க, பண்டாரவளை நகர மேயர் ஜனக்க நிஷாந்த ரத்நாயக்க, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.ஏ.எம்.எஸ்.பி. அம்பன்வெல, மாகாண கல்வி பணிப்பாளர் டி.எம்.ரத்நாயக்க, கோட்ட கல்வி பணிப்பாளர் ஷந்தலால் எதிரிசிங்க ஆகியோர் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும்,  விருந்தினர்கள் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிப்பதையும்  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டு பாராட்டப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.

 

 

நடராஜா மலர்வேந்தன்

 

Related Articles

Latest Articles