பண்டாரவளை நகர பொதுச்சந்தையை நாளை (09) முதல் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிராந்திய COVID-19 தொற்று கட்டுப்பாட்டு அமைப்பினால் நகர மண்டபத்தில் இன்று நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நகர மேயர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
பண்டாரவளை நகரில் COVID மரணங்கள் பதிவானதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை நகரில் COVID தொற்றைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலகம், வீதி அதிகார சபை மற்றும் தேயிலை சபை என்பன ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.










