பண்டாரவளை, ஹப்புத்தளை வீதியில் பார ஊர்தி விபத்து – இருவர் படுகாயம்!

பண்டாரவளை, ஹப்புத்தளை வீதியில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து பண்டாரவளை பகுதிக்கு பொருட்களை ஏற்றி வந்த பார ஊர்தியொன்றே இன்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில் ஓத்தகடை புகையிரத கடவைக்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பார ஊர்தியில் பிரேக் இயங்காமையால் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பார ஊர்தியின் சாரதியான 44 வயதுடைய நபர் படு காயமடைந்த நிலையில் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

பாரவூர்தியின் உதவியாளர் தியத்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles