அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ என்னும் ஆறு, புனித பாட்ரிக் பண்டிகையை ஒட்டி பச்சை நிறமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதகுருவான புனித பாட்ரிக்கை நினைவு படுத்தும் வகையில், வருட வருடம் மார்ச் 17ல் புனித பாட்ரிக் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த கொண்டாட்டத்தின்போது, இங்குள்ள மக்கள் பச்சை நிற ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிகாகோ நகரில் பாயும் சிகாகோ ஆற்றை பச்சை நிறமாக மாற்றும் பணி நேற்று நடந்தது.
கடந்த 1962-ம் ஆண்டு முதல் ஆற்றில் பச்சை சாயம் பூசுவது நடந்து வரும் சூழலில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக புனித பாட்ரிக் தினக் கொண்டாட்டம் தடைபட்டு, ஆற்றில் சாயம் கலப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சாயம் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஆற்றை பச்சை நிறமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.