மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வைத்தியசாலைகளில் சர்ச்சையில் இருக்கும் மயக்க மருந்து தொடர்பான நிலைமையை விளக்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.