பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி விலகம் கடிதம் தம்மிடம் கையளித்திருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர , தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்த ஹர்ஷன சூரியப்பெரும , நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த மஹிந்த சிறிவர்தன சேவையில் இருந்து ஓய்வுபெற்று சென்றுள்ளார். எனவே, நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்படவுள்ளார். அதற்காகவே எம்.பி. பதவியை துறந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.










