“மக்களால் தெரிவு செய்யப்படும் இ.தொ.காவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் பதவி பறிக்கப்படும்.” – என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜீவன் இவ்வாறு கூறினார்.
” நாம் ஆளுங்கட்சியில் இருந்தபோது பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது? எங்களுடைய மக்களுக்கு வீட்டுரிமையும், காணி உரிமையினையும் வழங்குவதே அவர்களுக்கான நிரந்தர தீர்வாகும்.
மேலும் தற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை இ.தொ.கா விதித்துள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை மக்களை சந்துத்து கலந்துரையாடவேண்டும், அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்கப்படவேன்டும் போன்ற மக்கள் நலன்சார்ந்த பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம். அதை மீறும் பட்சத்தில் குறித்த வேட்பாளரின் பதவி மூன்று நாட்களில் பறித்து புதிய உறுப்பினர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவர்.” – என்றார்.