உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம்.
மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களது வாழ்வினை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பினையும் செய்ய பெற்றோர் தயாராக இருப்பதை பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவதானித்தவைகள் என்னுள் அளப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
“எங்கள் நாடு, எங்கள் கைகளில்” என்பது உலக சிறுவர் தினக் கருப்பொருளாகக் காணப்படும்போது, சிறுவர்கள் தொடர்பாக எமது கடமைப் பொறுப்பு யாது என்பதைப் புதிதாக சிந்திப்பதற்கு இக்கருப்பொருள்கள் எம்மை ஊக்குவிக்கின்றன.
ஒருபுறத்தில் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி ஒழுங்கின் பிடியில் குழந்தைப் பருவம் சிக்கியுள்ளதுடன், மறுபுறத்தில் நவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றம் சிறுவர் உலகினை ஆக்கிரமித்து வருகிறது. மதுபானம், போதைப் பொருட்களின் அச்சுறுத்தல், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தல் போன்றனவும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன. இந்த எல்லா வகையான தடைகளின் மத்தியிலும் வாழ்வினை ஒழுங்கமைப்பதற்கு வளர்ந்தோரான எமது உதவியும் வழிகாட்டலும் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டியுள்ளது.
உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், அன்பு, அவதானத்தினை வழங்கவும் அணைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.
தேசைமானி தேசகீர்த்தி பதுருத்தீன்
சமூக செயற்பாட்டாளர்
நிறுவனர் பதுர் பாபா பவுண்டேஷன்