இன்று (09.01.2021) மு.ப.10.00 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் வண்டி ஹாலிஎல ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடுபாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.


இதன்போது யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை, என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடம்புரண்டுள்ள ரயில் வண்டியின் பெட்டிகளை ஓடுபாதையில் நிறுத்தும் பணிகளில் தற்போது பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
