பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் தெமோதரையில் விபத்து! 19 பேர் காயம்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, தெமோதர பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி, நடத்துனர் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகலே  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த 8 பெண்களும், 11 ஆண்களும் பதுளை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles