பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த சிலநாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது. இன்று (20/07/2020) அதிகாலை முதல் அடைமழை பெய்வதோடு பனிமூட்டமும் நிறைந்து காணப்படுகிறது.
அத்தோடு வழமைக்கு மாறாக அதிக குளிர் காலநிலைமையும் உணரக்கூடியதாகவுள்ளது. இதன்காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பிரதான வீதிகளிலும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகனசாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடராஜா மலர்வேந்தன்
