கடும் மழையால் பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதியில் கொட்டமுதுன பாடசாலைக்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பதுளை – மட்டக்களப்பு வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 28 ம் கட்டை பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறையில் இருந்து எல்ல ஊடாக பண்டாரவளை செல்லும் வீதியில் நமுனுகுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட EGK 15 ம் கட்டை பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மஹியங்கனை வீதியின் தெல்தென்ன 7 ம் கட்டை பகுதியில் மண்மேட்டுடன் மரமும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு தற்போது ஒற்றை வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
