பதுளை, மஹிங்கனை வீதி 7 ஆம் கட்டை தல்தென பகுதியில், கால்வாயிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை, பதியத்தலாவை 5 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய குறித்த இளைஞர், தனது காதலியை பார்வையிட, தல்தென பகுதிக்கு நேற்று வருகை தந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் காதலியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயிலேயே அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா