பதுளையில் கைக்குண்டு மீட்பு!

பதுளை – மஹியங்கனை வீதியில் உள்ள காணெியொன்றில் இருந்து இன்று (18)  காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள  பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு அருகில்  கைக்குண்டு கிடப்பதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  குறித்த பகுதிக்கு சென்று கைக்குண்டுடை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

K90 ரக கைக்குண்டே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுக்திய நடவடிக்கைக்கு அஞ்சி,  கைக்குண்டு குறித்த பகுதியில் வீசப்பட்டிருக்கலாம்  என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles