பதுளையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

பதுளை பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வடிகானில் இருந்து இன்று (27) காலைபெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் பதுளை நகரைச் சேர்ந்த 55 வயதுடைய யாசக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், குறித்த மரணம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் பதுளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles