பதுளை – கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7 ம் கட்டை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மனித எச்சங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீதியில் குவிந்துகிடந்த மண் மற்றும் கற்களை அகற்றும்வேளையிலேயே குறித்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட ஹாலிஎல பொலிஸார், மண்சரவு எற்பட்ட பகுதி மயானம் எனவும் மண்சரிவால புதைக்கப்பட்ட ஒருவரின் சடலத்தின் எலும்பு துண்டுகள் வெளியில் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை முன்வைத்த பின்னர் குறித்த எச்சங்கள் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
