பதுளை, வினீதகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது தோட்டத்தில் விளையும் பயிர்களை , விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.
மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா
