புகையிரதத்தில் மோதுண்டு நேற்று இரவு 7.20 மணியளவில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்யன்னேவெல பதுளை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் தெய்யனேவெல பகுதியில் அமைந்துள்ள சுரங்க பாதைக்கு அருகாமையிலேயே குறித்த நபர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










