பதுளை, 6 ஆம் கட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சந்தேக நபர் வௌஸ்ஸ தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் வெவெஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை – 6 ஆம் கட்டை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து 60 வயதான பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.










