பதுளை, உடகும்பல்வெல என்ற இடத்தில் (இன்று) 22-12-2021
எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
எரிவாய்வு அடுப்பினை இயக்கிவிட்டு, சமையல் செய்த பெண் சமையலறையை விட்டு, விலகியிருந்தமையினால், இவ் வெடிப்பில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனாலும், இவ் வெடிப்பில், சமையலறையின் ஏனைய பொருட்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உடகும்பல்வெலை என்ற இடத்தின் கடையொன்றில், இவ் எரிவாய்வு சிலிண்டர் பெறப்பட்டுள்ளது. இச் சிலிண்டரில் சிவப்பு மற்றும் நீல நிறங்களிலான உறுதிப்படுத்தப்பட்ட அடையாளங்களும் பொறிக்கப்பட்டிருப்பமை குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை










