பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்துமுள்ளை ஆகிய பொது சுகாதாரப் பிரிவுகளில் கோவிட் 19 தொற்றாளர்கள் 96 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் ககாகொல்லை, பிந்துனுவௌ ஆகிய இடங்களின் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு 17-11-2021ல் அனுப்பப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பொது சுகாதாரப் பணிமனையில் 17-11-2021ல் (இன்று) 190 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர்களில் 61 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ். சுரேஸ்குமார் தெரிவித்தார்.
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பணிமனையில் 17-11-2021ல் (இன்று) 50 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர்களில் 11 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.
ஹல்துமுள்ளை பிரதேச சுகாதாரப் பணிமனையில் 17-11-2021ல் (இன்று) 40 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர்களில் 24 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ஜீவந்த பிரசன்ன தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை