பதுளை மாவட்டத்தில் நடந்த தபால் மூல வாக்களிப்பில் பங்கெடுத்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முன்னிலையில் இருப்பதாக சிங்கள ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக அபிவிருத்தி மன்றம், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், தமிழ் யூனியன், நாளைய மலையகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளிலேயே, செந்தில் தொண்டமான் முன்னிலையில் உள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, சமூக அபிவிருத்தி மன்றம், கந்தேகெதரை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட 15 தோட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 81 சதவீதமளவில் முன்னிலையிலுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், ஒன்றியத்திலுள்ள 400 உத்தியோகத்தர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும், அவர் 81 சதவீதம் முன்னிலையிலுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் யூனியன் அமைப்பானது, தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்ட 1,476 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 82 சதவீதத்தில் செந்தில் முன்னிலையிலுள்ளார்.
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில், நாளைய மலையகம் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 79 சதவீதமும் தொலைபேசிச் சின்னம் 12 சதவீதமும், யானைச் சின்னம் 6 சதவீதமும், மக்கள் விடுதலை முன்னணி 2 சதவீதமும், சுயேச்சை குழுக்கள் 1 சதவீதமும் பெற்றுள்ளன.
மலையக சகவாழ்வு சங்கம் மேற்கொண்ட ஆய்வில், 81.6 சதவீதமளவில் செந்தில் தொண்டமான் முன்னிலையிலுள்ளார் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்துமுடிந்த தபால் மூல வாக்களிப்பில் அதிக வாக்குகளை செந்தில் தொண்டமான் பெற்றுள்ளதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக தமிழ் மிரர் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Lanka News 24 செய்தித் தளத்தில் வெளிவந்த செய்தி
ஆடம்பரய என்ற செய்தித் தளத்தில் வெளிவந்த செய்தி