பதுளை மாநகரின் வாரச் சந்தை மற்றும் அங்காடி வியாபாரிகளின் விற்பனைகள் ஆகியன மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர மேயர் பிரியந்த அமரசிரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது
,“பதுளை மாவட்டத்தில் கொரோனாதொற்றாளர்கள் பலர் கண்டுப்பிடிக்கப்பட்டதினால், அவர்களுடன் தொடர்புடைய பலர், பதுளை மாநகரத்தின் வாரச்சந்தை, அங்காடி வியாபாரிகளின் விற்பனை ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும்.
அத்துடன் பதுளைமா வட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதிகளில் வாரச் சந்தைகள் மூடப்பட்டிருப்பதால், அவ் வியாபாரிகள் பதுளை மாநகருக்கும் வருவர். இச் செயற்பாடுகள் எமது மாநகருக்கும் அச்சுறுத்தலாக அமையுமென்பதினால், மேற்படி தடையை ஏற்படுத்தியுள்ளேன்.
அத்துடன் வாரச்சந்தை, அங்காடி வியாபாரம் ஆகியவற்றினால் பாதிக்கப்படும் வியாபாரிகள் நன்மைகருதி, சுகாதார வழிமுறைகளுக்கமையமாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”என்றும் தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை