பதுளை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுள், 22 மாணவர்கள் சித்தியடைந்து, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு, இவ் வித்தியாலயத்திலிருந்து 26 மாணவ, மாணவிகள் தோற்றியிருந்த போதிலும், 22 பேர் மட்டுமே சித்தியடைந்தனர்.
இவர்களில் 1ஏ – 2 பி – ஏ. எப்தனிசான், 2 பி – 1 சி – எம். அபிலாசினி, 2 பி – 1 சி – டி. சியாமளா, 2 ஏ – 1 சி – எஸ். கௌரி ஆகிய நான்கு மாணவ, மாணவிகள் சிறந்த பெறுபேற்றுக்களைப் பெற்றுள்ளனர்.
22 மாணவ, மாணவிகளும் தமிழ் – 92 வீதமும், அரசறிவியல் – 94 வீதமும், மனையியல் – 94 வீதமும், அளவியல் 67 வீதமும், சித்திரம், சங்கீதம், இந்து நாகரீகம், புவியியல் ஆகிய பாடங்களில் 100 வீதமும், குறிப்பாக சித்தியடைந்தமை 85 வீதமுமாக அமைந்துள்ளதென்றும் வித்தியாலய அதிபர் கந்தசாமி ரவிக்குமார் தெரிவித்தார்.
அத்துடன் ‘நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 22 மாணவ, மாணவிகள் சித்திபெற்று, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளமையும், பெரும் சாதனையேயாகும். அவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்றும் அதிபர் கூறினார்.
சித்திபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளென்பதும், பரீட்சைக்கு தோற்றியவர்களுள் நான்குபேர் சித்தியடையவில்லையென்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை
