பதுளை, பிராந்திய ஊடகவியலாளர் ராமு தனராஜாவை, பதுளையில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர், தாக்க முற்பட்டு , கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளார் என பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமு தனராஜ், நேற்று கடமை நிமித்தம் ஹாலிஎல பகுதிக்கு சென்று தனது வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தவேளை பசறை 10 ஆம் கட்டை பகுதியில் வைத்து குறித்த நபரினால், ” என் தலைவருக்கு எதிராக செய்தி எழுதியுள்ளாய்..” எனக்கூறி தகாத வார்த்தைகளை உபயோகித்து, “உன்னை என்றாவது ஒருநாள் கொலை செய்வேன்.” என அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் ஊடகவியலாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் ஜனநாயகம் கோலோச்சவேண்டுமெனில் அங்கு ஊடக சுமந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலையக ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.











