– மாவட்டம் முழுவதும் 63 தேர்தல் அலுவலகங்கள் அமைப்பு –
பதுளை மாவட்டத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் ஒரேயொரு பலமிகுந்த சிறுபான்மை வேட்பாளரான செந்தில் தொண்டமானுக்கு மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையினர் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம் முழுவதும் செந்தில் தொண்டமானுக்காக 63 தேர்தல் காரியாலயங்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அமைத்துள்ளனர். இதுவரை வரலாற்றில் எந்தவொரு மலையக தலைவருக்கும் இந்தளவு செல்வாக்கு பெரும்பான்மை சமூகத்திடமிருந்து கிடைத்திருக்கவில்லை. செந்தில் தொண்டமான்மீது பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டு அசைக்க முடியாத நம்பிக்கையின் எதிரொலியே இந்த ஆதரவு அலை.
பதுளை மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை வெற்றிபெற செய்வதற்காக பெரும்பான்மை சமூகமும் இன்று அவருடன் கைகோர்த்துள்ளது. செந்தில் தொண்டமானின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து பயணிப்பதற்கும், ஊவாவில் இனம், மதம் கடந்து சேவை செய்த ஒரே தலைவராக அவர் உள்ளதாலும் மாவட்டம் முழுவதும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளனர்.
ஏற்கனவே, 50இற்கும் அதிகமான பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்திருந்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்புத் தொடர்பில் பதுளைவாழ் தமிழ் அரச ஊழியர்களிடம் நடத்தப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் 80 சதவீதமான வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன்மூலம் இம்முறை அமைய போகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவியொன்று கிடைப்பதும் ஊர்ஜிதமாகியுள்ளதால் பெரும்பான்மையினர் மத்தியில் செந்தில் தொண்டமானுக்கு அசைக்க முடியாத செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.