பதுளை மாவட்டத்தில் 10 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

பதுளை மாவட்டத்தில் இயங்கும் 18 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் 163 இல் 10 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் திருமதி. தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் நேற்று(21) நண்பகலுடன் நிறைவடைந்த நிலையில் ,இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 06 அரசியல் கட்சிகளினதும், 04 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் அடங்குகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் 184 கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அவற்றில் 134 அரசியல் கட்சிகளும் 29 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

கட்டுப்பணம் செலுத்திய ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 19உம்,02 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
ஹாலிஎல பிரதேச சபைக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனு,ஊவாபரணகம பிரதேச சபைக்கு எக்சத் மாஹஜன பெரமுன தாக்கல் செய்த வேட்புமனு ,எல்ல பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழு (புஷ்பராஜா சுரேஷ்கரன் ) தாக்கல் செய்த வேட்பு மனு, அப்புத்தளை பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு (பிரசங்க பிரதீப் குமார)என்பற்றால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ,ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக்க பிரஜாதந்திரவாதி பெரமுன மற்றும் சுயேட்சை குழு (சிவக்குமார் வினோத்) என்பற்றால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ,மஹியாங்கன பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, சுயேட்சைக் குழு (டி.எம்.சுனில்) என்பற்றால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றிற்காக அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் உள்ள 02 மாநகர சபைகள்,01 நகர சபை, 15 பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்,128 ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 28 சுயேட்சைக் குழுக்களுமாக 153 வேட்பு மனுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டசெயலாளர் தெரிவித்தார்.

பசறை நிருபர், நுவரெலியா நிருபர்

Related Articles

Latest Articles