பதுளை – மஹியங்கனை வீதியில் துங்கிந்தை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 42 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்ததோடு 6 ஆண்களும் இரு பெண்களும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதுளை வைத்தியசாலையின் வாட்டு இலக்கம் 10 ல் 13 பெண்களும் ,வாட்டு இலக்கம் 9 ல் 13 ஆண்களும் , வாட்டு இலக்கம் 25 ல் 5 ஆண்களும் பெண் ஒருவர் அடங்கலாக 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா