பனிப்பாறை சரிந்ததில் மலையேறிய 6 பேர் பலி

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும்.

இத்தாலி,பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த மலைத்தொடரில் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலர் ஈடுபடுவார்கள்.

இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மலைத்தொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா எனற பகுதி வழியாக இந்த சிகரத்தை அடையலாம்.

இந்த பகுதியில் பலர் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், புன்டா ரோக்கா பகுதிக்கு அருகில் பனிப்பாறை சரிந்து விழுந்தது. மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் சிலர் அதில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெல்லுனோ, ட்ரெவிசோ, டேரெண்டோ மற்றும் போல்சானோ ஆகிய பகுதியல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles