பயங்கரவாத தடைச்சட்டத்தை இன, மத அடிப்படையில் பயன்படுத்தவில்லை; அது விரைவில் நீக்கப்படும்!

“பயங்கரவாத தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அச்சட்டம் வெகு விரைவிலேயே நீக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் முஸ்லிம்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர் எனக் கூறப்படும் கருத்தை ஏற்கமுடியாது. அவ்வாறானதொரு விம்பத்தை சமூகத்தில் ஏற்படுத்த முற்படவும் கூடாது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்ய வேண்டுமெனில் அது விடயத்தில் இனம் மற்றும் மதம் என்பன தாக்கம் செலுத்தாது. விசாரணை நடவடிக்கை என்பதே முக்கியம். பயங்கரவாத தடைச்சட்டமானது இனத்தை அடிப்படையாகக்கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமக்கு விமர்சனம் உள்ளது. அச்சட்டத்தை நீக்குவதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் நடைமுறையில் உள்ள சட்டத்தைதான் பயன்படுத்த நேரிடும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles