பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்

 

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இம்மாத இறுதிக்குள் அந்நடவடிக்கை இறுதிபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனவும், செப்டம்பர் மாத இறுதிக்குள் சட்டமூலம் இறுதிபெறும் எனவும் முன்னதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மேற்படி நடவடிக்கைக்குரிய சட்டமூல தயாரிப்பு பணி இடம்பெறுகின்றது. இம்மாதத்துக்குள் அது இறுதிபெறும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளது. அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles