பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விதிமுறைகளை மீறுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
2020 ஒக்டோபர் முதல் நேற்றுவரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 11 ஆயிரத்து 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.










