பயணத்துக்கு பணமில்லை’ – தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன்! நெஞ்சை நொறுக்கிய சம்பவம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன்.72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது தாயாரை ஜல்பாய்குரி மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு கடந்த புதன்கிழமை கொண்டு போய்ச் சேர்த்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த நாளே உயிரிழந்தார். அங்கிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்துச்செல்வதற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.3 ஆயிரம் (இந்திய ரூபா) கேட்டிருக்கிறார்கள்.

அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. உடனே அவர் தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் வைத்து சுமந்து கொண்டு சொந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அதன் இன்னொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்தவாறு பின்தொடர்ந்தார். இந்த காட்சி நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது.

அத்துடன், சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து ராம்பிரசாத் தெவன் தாயார் உடலை வீடு கொண்டு போய்ச் சேர்த்துள்ளது.

இதுபற்றி ராம் பிரசாத் தெவன் கூறியதாவது:-

” எங்கள் அம்மாவை வைத்தியசாலைக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.900 கொடுத்தோம். ஆனால் அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.3 ஆயிரம் கேட்டனர். எங்களால் அவ்வளவு பணம்கொக்க வசதி இல்லை.

எனவே அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி என் தோளில் வைத்து சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் வயதான அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles