பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட காணிகள் சுவீகரிக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முன்மொழிவை அமைச்சரவையின் அனுமதிக்கு முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகள் புதிய செடிகளை நடுவதை முற்றாக நிறுத்தியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலாக தற்போதையை பயிர்களைப் பேணுவது அல்லது அந்தக் காணிகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசாங்கத்தின் பொது விடயமொன்றுக்கு சிறிய அளவிலான காணியையோ அவர்கள் வழங்குவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்தப் பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்கு அவசியமான சட்ட வரைபு நடவடிக்கைகளுக்கு தமது தரப்பின் ஆதரவை வழங்குவதாக எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அதேபோன்று, பாரியளவிலான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரித்து அவற்றை சிறிய அளவிலான தேயிலைக் கைத்தொழிலுக்கு வழங்கி அதன் மூலம் நாட்டின் தேயிலைக் கைத்தொழிலை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் முன்மொழிந்தார்.

அதேபோன்று, தேயிலைக்கான பசளை மற்றும் பூச்சிகொல்லி என்பன சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை மற்றும் அவற்றின் போதுமான தன்மை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், பிரதேச ரீதியாகக் காணப்படும் பெருந்தோட்டக் கைத்தொழில் தொடர்பான சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles