தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு விவசாயம் செய்யப்படாத காணிகளை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களாக உருவாக்குவோம் – என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பண்டாரவளையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தேயிலை உற்பத்தி உள்ளிட்ட ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை 5000 ரூபாய்க்கு வழங்குவதோடு, விவசாய அறுவடைகளுக்கு நிர்ணய விலையைப் பெற்றுக் கொடுப்போம்.
குளிரூட்டி வசதிகள், பசுமை இல்ல வசதிகள் என்பனவற்றின் ஊடாக சகல வசதிகளையும் கொண்ட விவசாயத் துறையில் விவசாயிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.