கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஏ – 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பரந்தன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்றவரை ஆடைத் தொழிற்சாலை பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பரந்தன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.