பரபரப்பாகிறது தெற்கு அரசியல் களம்! ஆளுங்கட்சியினருக்கு வெளிநாடு பறக்க தடை!!

செப்டம்பர் முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களை செப்டம்பர் 5 ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் ஊடாக இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை செப்டம்பர் 5 முதல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. செப்டம்பர் 7 அல்லது 8 ஆம் திகதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனவே, அப்பிரேரணையை தோற்கடிப்பதற்கும், ஆளுங்கட்சி ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் ஆளுங்கட்சியின் கட்டாயம் சபையில் இருக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles