ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
எனவே, அவ்விவகாரம் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
