பரம எதிரிகள் பலப்பரீட்சை: இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

ஆசிய விளையாட்டுப் போட்டியின் T20 கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இலங்கையின் இரண்டாம் கட்ட அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் தனது எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

ஆசிய விளையாட்டு வரலாற்றுப் பக்கங்களில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல்முறையாகும். ஒக்டோபர் 03 ஆம் திகதி போட்டி நடைபெறவுள்ளது.

கடந்த ஓராண்டாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் கிரிக்கெட் களத்திலும் எதிரொலித்து வரும் நிலையில், இப்போட்டிக்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கல் நிகழ்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது, அப்போதைய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது சக வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்க மறுத்தனர்.

மேலும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெறவும் இந்திய அணி மறுத்துவிட்டது.

கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்ற பிறகும், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles