மலையக மக்களுக்காக பட்ஜட்டில் ரூ.3000 ஒதுக்கீடு என்பது மலையளவு மகா பொய் என்கிறார் மனோ!

 

மலையக தமிழ் மக்களின் சமூக நல் வாழ்வுக்காக ஒதுக்க பட்டுள்ளதாக கூறப்பட்ட பதின்மூன்று ஆயிரம் (13, 000) மில்லியன் ரூபா தொகை பற்றிய உண்மை விபரங்கள் வெளியே கூற விரும்புகிறேன். பெருந்தோட்ட கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய நிதியை, மலையக தமிழ் மக்களின் சமூக நல திட்டங்களுக்காக ஒதுக்கினோம் என சொல்லாதீர்கள் என கூற விரும்புகிறேன்.

பின் தங்கிய எமது மக்களின் நேரடி காணி, வீடு, கல்வி, சுகாதாரம், ஆகியவற்றுக்காக விசேட நிதி ஒதுக்கீட்டை, நீங்கள் வழங்க வில்லை என்பதை மறைத்து, இல்லாததை, இருப்பதாக காட்டி, மனசாட்சியே இல்லாமல் பொய் கூறாதீர்கள் எனவும் கூற விரும்புகிறேன்.

பெருந்தோட்ட கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய ஒதுக்கீட்டை, மக்களின் சமூக நல பணிகளுகான ஒதுக்கீடுகள் என கூசாமல் கூறப்படும், பொய்கள், நண்பர் நிதி அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரை களங்க படுத்தும் மலையளவு-மகா-மலை நாட்டு பொய்கள் ஆகும் என்பதை ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்து உள்ளேன்.

இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள விசேட செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது;

நிதி அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தேயிலை, இறப்பர், தென்னை, பனை, ஆகிய இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய பதின்மூன்று ஆயிரம் (13, 000) மில்லியன் ரூபா தொகை பற்றிய உண்மை விபரங்கள் இதோ:

(1)ஹம்பன்தொட்டை, புத்தளம், வட-கிழக்கு,பனை செய்கை விரிவாக்கம்- ரூபா 100 மில்லியன்;

(2) தென்னை புனர்வாழ்வு- ரூபா 2,500 மில்லியன்;

(3) இறப்பர் மர ஆராய்ச்சி- ரூபா 500 மில்லியன்;

(4) தேயிலை தொழில் பேட்டைகள்- ரூபா 730 மில்லியன்;

(5) தேயிலை, இறப்பர், தென்னை, பனை, ஆகிய துறை ஊழியர்களின் பிரஜாசக்தி அபிவிருத்தி- ரூபா 3,000 மில்லியன்;

(6) தரிசு நில மீள் நடுகை தேயிலை சிறு தோட்ட முதலாளிகளுக்கு மானியம்- ரூபா 820 மில்லியன்;

(7) பெருந்தோட்ட தேயிலை முதலாளிகளுக்கு உர மானியம்- ரூபா 5,000 மில்லியன்;

(8) இறப்பர் தோட்டமுதலாளிகளுக்கு மீள் நடுகை மானியம்- ரூபா 650 மில்லியன்;

(9) தோட்ட முதலாளிகளுக்கு இறப்பர் உர மானியம்- ரூபா 1,000 மில்லியன்;

இத்துடன் கடந்த வருடம் வழங்க பட்ட 200 ரூபா சம்பள உயர்வு மீண்டும் வழங்கபடுகிறது. இதை முறையாக வழங்காமல் தேயிலை கொளுந்து நிறையை கூட்டி, கம்பனிகள் சம்ப உயர்வை தர கடும் கெடுபிடி செய்கிறார்கள்.

அதனால், இம்முறை சம்பள உயர்வை சம்பள நிர்ணய சபை மூலம் வர்த்தமானியாக வெளியிட சொன்னேன். நான் சொன்னதை இந்த ஜனாதிபதி கேட்கவில்லை. செய்யவும் இல்லை.

உண்மையில் பதின்மூன்று ஆயிரம் (13, 000) ரூபாயை விட அதிகமாகவே தொகை அறிவிக்க பட்டுள்ளது.

ஆனால், இது இவர்கள் காட்ட முயல்வது போன்று மலையக தமிழ் மக்களின் காணி, வீடு, கல்வி, வீதிகள், சுகாதாரம், மந்த போஷனம், வேலை வாய்ப்பு, ஆகிய சமூக, பொருளாதார, கலாச்சார, நலன்களுக்காக பெற்று தரும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யும், திட்டங்களுக்காக அல்ல.

உண்மையில், அரசாங்கம் இத்தகைய ஒரு தொகையை மலையக மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, நலன்களுக்காக ஒதுக்கி இருந்தால், பட்ஜெட் நேரத்திலேயே எழுந்து, நின்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்தி, பாராட்டும், முதல் கட்சி தலைவராக, எம்பியாக நான் இருந்து இருப்பேன். ஆனால், இது நடக்க வில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles