பற்றி எரிந்தது வீடு – வயோதிபப் பெண் உடல் கருகி பலி!

புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவல்கெல பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பெண்ணொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.

கிரிவல்கெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை ஓலையினால் வேயப்பட்ட சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் குறித்த வீடு நேற்று தீப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீபற்றிய போது இவரது 70 வயதான கணவர் வெளியேறி உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் உள்ளார்.
தீ விபத்து தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles