‘பலாங்கொட்டையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு’

பலாங்கொடை தேர்தல் தொகுதியில் உள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவுவதால் பிரதேச மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இம்புலமுர மற்றும் ஹந்தகிரிய பிரதேசங்களில் கடந்த வாரம் தொடர்ச்சியாக இரவு நேரத்தில் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து பல ஏக்கர் வயல் நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வாழை, மரக்கறி உற்பத்திகள் அனைத்தையும் அழித்து நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வருடங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் தொல்லைகள் இடம்பெறவில்லை என தெரிவித்த கிராம வாசிகள், இந்த வருடம் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதுடன் யானைகளை விரட்டிவிட யானை வெடிகள் உரிய
முறையில் எமக்கு கிடைப்பதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பலாங்கொடை மற்றும் இம்புள்பே பிரதேச செயலாளர் பிரிவு களில் இந்த காட்டு யானைகளின் தொல்லை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியவின்னகோன்கஹ, மன்
கட-கலுபேடிகம ஆகிய பகுதிகளைஉள்ளடக்கி யானை வேலிகளைஅமைத்த பிரதேசங்களில் கூட காட்டு யானைகள் வருவதாக கிராம மக்கள் குறிப்பிட்டனர்.

இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இரத்தினபுரி மாவட்ட இணைப்பு கமிட்டி கூட்டத்தில் இந்த காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு துரி தமாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென
கேட்டுக்கொண்டார்.

இது சம்பந்தமாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் அண்மையில் பலாங்கொடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் யானை வெடிகள் தட்டுப்பாடு நிலவுவதாக அப்போது வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்ததாகவும் மேலும் முழு நாட்டிலும் 2000 அதிகாரிகள் மட்டுமே
பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் பலாங்கொடைபகுதியில் நிலவும் காட்டு யானைகளின் பிரச்சினையினை இயன்றளவு கவனம் செலுத்தி அதனைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரநடவடிக்கை எடுப்பதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles